தெருவிளக்கு வசதி தேவை

Update: 2026-09-06 10:30 GMT

அரியலூர் மாவட்டம் தா.பழூர்-அன்னகாரம்பேட்டை செல்லும் வழியில் உள்ள அரசு பள்ளி, காவல் குடியிருப்பு, சார் பதிவாளர் அலுவலகம் மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய சாலை பகுதியில் தெருவிளக்குகள் எரியவில்லை. இதனால் அவசர சிகிச்சைக்கு செல்லும் நோயாளிகளும், இரவு நேரத்தில் அவ்வழியாக செல்லும் பொதுமக்களும் கடும் இருளில் மிகுந்த அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அப்பகுதியில் புதிய தெருவிளக்குகளை அமைத்து பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்