திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட ராணுவ சாலையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு தினமும் ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். ஆனால் இந்த ஆஸ்பத்திரியின் நுழைவு வாயில் பகுதியில் இரவு நேரங்களில் மின்விளக்குகள் சரிவர எரிவதில்லை. இதனால் ஆஸ்பத்திரிக்கு வரும் நோயாளிகளும், பொதுமக்களும் மிகுந்த சிரமம் அடைகின்றனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.