எரியாத தெருவிளக்குகள்

Update: 2026-07-19 12:28 GMT

திருச்சி மாவட்டம் சங்கிலியாண்டபுரம் 49-வது வார்டுக்கு உட்பட்ட நாகம்மை தெருவில் பல நாட்களாக தெருவிளக்குகள் எரியாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் இப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் இருளை பயன்படுத்தி சட்டவிரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்புள்ளது. எனவே, தெருவிளக்கு கம்பங்களில் மின்விளக்கு பொருத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்