ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் பகுதியில் கடந்த சில நாட்களாக அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் அப்பகுதி குடியிருப்பு வாசிகள், தொழிலாளர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் அவசர தேவைகளுக்கு மின்சாத பொருட்களை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே மின்வாரிய அதிகாரிகள் மேற்கண்ட பகுதிக்கு தடையின்றி மின்வினியோகம் வழங்க வேண்டும்.