திருவள்ளூர் மாவட்டம், விளாங்காடுப்பாக்கம் ஊராட்சி , மல்லிமாநகர் பெருமாள் கோயில் பிரதான சாலையில் உள்ள இந்த மின் கம்பம் குனிந்தவாறு கீழே விழும் நிலையில் உள்ளது. எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழும் அபாய நிலையில் உள்ள மின்கம்பம், அப்பகுதி மக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் மின்கம்பத்தை சீரமைக்கவேண்டும்.