முள்ளிப்பாடி பகுதியில் சாலையோர மரத்தை ஒட்டியபடி மின்கம்பம் உள்ளது. இந்த நிலையில் மரக்கிளைகள் அவ்வப்போது முறிந்து மின்சார கம்பிகள் மீது விழுகிறது. இதனால் அப்பகுதியில் மின்விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே விபத்து ஏற்படுவதற்கு முன்பு மரத்தை வெட்டி அகற்ற வேண்டும்.