பந்தலூர் அருகே பிதிர்காடு யுனிசெப் காலனியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். வனப்பகுதிக்கு அருகில் இருப்பதால் காட்டுயானை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் காணப்படுகிறது. ஆனால் அந்த பகுதியில் தெருவிளக்கு வசதி எதுவும் இல்லை. இதனால் அந்த பகுதி இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக வனவிலங்குகள் நடமாட்டம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. எனவே தெருவிளக்கு வசதி ஏற்படுத்தி கொடுக்க அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.