பல்லடம் நகரில் பஸ் நிலையம் உள்பட பெரும்பாலான இடங்களில் தெரு விளக்குகள் பகலிலும் எரிந்த வண்ணம் உள்ளது. அவை தொடர்ந்து 3 மணி நேரத்திற்கு மேல் எரிவதால் அரசின் நிதி வீணாக்கப்படுகிறது. மேலும் பகல் நேரத்தில், தெரு விளக்குகள் தொடர்ந்து எரிவதால், பல்புகள் அடிக்கடி பழுதாகிறது. இதனால், இரவு நேரத்தில் எரிய வேண்டிய தெருவிளக்குகள் எரியாமல், இருள் சூழ்ந்த நிலை நீடிக்கிறது. இதனை பயன்படுத்தி சமூக விரோத செயல்கள் மற்றும் திருட்டு போன்ற சம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ளது. எனவே பகல் நேரத்தில் எரியும் தெரு விளக்குகளை உரிய நேரத்தில் அணைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பூபாலன், பல்லடம்.