ஏற்காட்டுக்கு சுற்றுலா பயணிகள் பஸ்களில் பல்வேறு ஊர்களில் இருந்து வந்து செல்கின்றனர். இந்த நிலையில் ஏற்காடு பஸ் நிலையத்தில் மின்விளக்குகள் எரிவதில்லை. இதனால் அங்கு செல்லும் பயணிகள் இரவு நேரங்களில் அச்சத்துடன் செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக எரியாத மின்விளக்குகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.