ஆபத்தான மின்கம்பம்

Update: 2026-05-31 17:51 GMT

அறச்சலூர் அரசு மேல்நிலைப்பள்ளி பின்புறம் பூசாரியூர் பிரிவில் பெரியார் வீதி உள்ளது. இங்குள்ள மின்கம்பத்தின் அடிப்பகுதி சிமெண்டு காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகிறது. கம்பத்தின் மேல் பகுதி விரிசல் அடைந்து மிகவும் ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. இதனால் எப்போது வேண்டுமானாலும் சாய்ந்து விழ வாய்ப்புள்ளது. அதற்கு முன்பு மின்கம்பத்தை மாற்றி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்