பவானி லட்சுமி நகரில் இருந்து மேட்டூர் மற்றும் பவானி-அந்தியூர் பிரதான சாலை காடையாம்பட்டி ரிங் ரோட்டில் தெருவிளக்கு உள்ளது. ஆனால் இந்த தெருவிளக்கு கடந்த ஒரு மாதமாக எரியவில்லை. இதனால் அந்த இடம் இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. பொதுமக்கள் அந்த வழியாக செல்ல அச்சப்படுகின்றனர். எனவே தெருவிளக்கை எரிய செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?