விக்கிரவாண்டி அடுத்த செம்மேடு கிராமத்தில் முன் அறிவிப்பின்றி இரவு மற்றும் பகல் நேரங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் தங்களது வீடுகளில் உள்ள மின்விசிறிகளை இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வருவதால் அவர்கள் புழுக்கத்தால் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சீரான முறையில் மின் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.