திருவள்ளூர் மாவட்டம் பெருமாள்பட்டு பகுதியின் ஐ.ஓ.பி. நகர் சாலையில் மின்மாற்றி உள்ளது. ஆனால் இந்த மின்மாற்றி சாய்வாக மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. மேலும் பலத்த காற்று வீசும்போது, அதில் இருந்து தீப்பொறி வருகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சத்துடனே அதனை கடந்து செல்கின்றனர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மின்மாற்றியை சரிசெய்து மக்களில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.