திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் மலையடிப்பட்டி கிராமத்திற்கு உட்பட்ட ஆவாரம்பட்டியில் உள்ள இந்திரா நினைவு குடியிருப்பு பகுதியில் கடந்த 2 மாதங்களாக தெருவிளக்குகள் எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பும் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைகின்றனர். மேலும் அப்பகுதியில் சாலையில் படுத்திருக்கும் தெருநாய்கள் கடித்துவிடுமோ என்று அச்சத்துடனேயே பொதுமக்கள் அவ்வழியாக சென்று வருகின்றனர். எனவே தெருவிளக்குகளை சரிசெய்வதற்கும், தெருநாய்களை கட்டுப்படுத்துவதற்கும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.