சங்கராபுரம் அருகே குளத்தூர் கிராமத்தில் மும்முனை சந்திப்பில் உள்ள உயர்கோபுர மின்விளக்கு பழுதடைந்து எரியாமல் உள்ளது. இதனால் அப்பகுதியில் திருட்டு, வழிப்பறி போன்ற குற்ற சம்பவங்களும், போக்குவரத்து அதிகம் உள்ள பகுதி என்பதால் விபத்துகள் நடைபெறும் சூழலும் உருவாகியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சப்படுகின்றனர். எனவே மின்விளக்கை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.