திருவெண்ணெய்நல்லூர் பேரூராட்சியில் 6-வது வார்டு பகுதியில் உள்ள மேட்டுத்தெருவில் மின்விளக்கு பழுதடைந்துள்ளது. இதனால் அங்கு திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்றசம்பவங்கள் நடைபெறும் வாய்ப்பு உருவாகியுள்ளது. மேலும் இரவில் அதிகளவில் விஷஜந்துக்களின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. எனவே மின்வாரியத்துறை அதிகாரிகள் பழுதடைந்த மின்விளக்கை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.