மதுரை மாவட்டம் திருமங்கலம்-ராஜபாளையம் சாலை தீயணைப்புத்துறை அலுவலகம் எதிரே அமைந்துள்ள உயர்கோபுர மின்விளக்குகள் பல நாட்களாக எரியாமல் உள்ளன. இதனால் இரவு நேரங்களில் அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே, அதிக வாகன போக்குவரத்து நிறைந்து காணப்படும் இந்த சாலையில் விபத்துகள் அதிகளவில் ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் பழுதடைந்து கிடக்கும் உயர்கோபுர மின்விளக்குகளை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.