திருவள்ளூர் மாவட்டம் மாத்தூர் எம்.எம்.டி.ஏ.ஏரிக்கரை சாலையில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இந்த பகுதியில் உள்ள மின்வயர்கள் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. மேலும் அங்குள்ள மரங்களில் உரசுவதால் அவ்வப்போது தீப்பொறி வருகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடனே கடந்து சென்கின்றனர். சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.