பள்ளிக்கரணை, வேளச்சேரி மெயின் ரோடு அரசு மேல்நிலைப்பள்ளி அருகே மின் கம்பம் ஒன்று மிகவும் ஆபத்தான நிலையில் உடைந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மிகவும் சிரமப்படுகின்றனர் எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள கோரிக்கை வைக்கின்றனர்.