சிவகங்கை ஒன்றியம் மேலூர்- ஒக்கூர் சாலை மேலப்பூங்குடி- கீழப்பூங்குடி பிரதான சாலையோரத்தில் மின்கம்பம் சேதமடைந்து காணப்படுகிறது. மின்கம்பத்தின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. அப்பகுதியை கடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சமடைகின்றனர். எனவே மின்கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.