‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு நன்றி

Update: 2026-05-24 10:45 GMT

பெரம்பலூர் வட்டம் செங்குணம் கிராமத்தில் கிராம பஞ்சாயத்து சேவை மையம் - டாக்டர் அம்பேத்கர் சிலை அருகிலும், செங்குணம் அண்ணா நகர் ரேஷன் கடை அருகிலும், செங்குணம் அண்ணா நகர் ஆட்டோ ஸ்டேண்ட் - எம்.ஜி.ஆர். சிலை அருகில் உள்ள உயர் கோபுர மின்விளக்கு கம்பங்களில் உள்ள பெரும்பாலான மின்விளக்குகள் பல நாட்களாக எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் அந்த பகுதிகள் இருள் சூழ்ந்து காணப்படுவதாக ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அனைத்து மின்விளக்குகளையும் ஒளிரச்செய்தனர். இதற்கு செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் இப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்