புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஊராட்சியில் தாலுகா அலுவலகம் முக்கத்தில் சத்தியமூர்த்தி சிலை அருகே மூன்று சாலைகள் சந்திக்கும் இடம் உள்ளது. இங்கு இருள் சூழ்ந்து இருந்ததால் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் சிரமமாக இருந்தது. இதையடுத்து அந்த இடத்தில் உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது. தற்போது இந்த உயர் கோபுர மின்விளக்கு நீண்ட நாட்களாக எறியாமல் உள்ளது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே உயர் கோபுர மின்விளக்கை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.