புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே மலைக்குடிப்பட்டி இந்திராநகர் பகுதியில் பொதுமக்கள் செல்லும் வழியில் பழுதான நிலையில் மின் கம்பம் ஒன்று உள்ளது. பொது மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ள இந்த மின்கம்பம் காற்றடிக்கும் நேரத்தில் முறிந்து விழுந்தால், உயிரிழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பு இந்த மின்கம்பத்தை மாற்றியமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.