கோவை பாப்பநாயக்கன்பாளையம் பகுதியில் தெருவிளக்குகள் சரிவர ஒளிருவது இல்லை. இதனால் அந்த பகுதி இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக அங்கு வசித்து வரும் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். எனவே தெருவிளக்குகளை ஒளிர வைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.