அடிக்கடி மின்தடை

Update: 2026-05-10 10:15 GMT

கூடலூர் 1-ம் மைல் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த சில நாட்களாக அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் பகல் மற்றும் இரவு நேரங்களில் மின்தடை ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக இரவில் மின்தடை ஏற்படுவதால் வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் அவசர, அத்தியாவசிய தேவைக்காக இருளில் பொதுமக்கள் வெளியே சென்று வர வேண்டி உள்ளது. எனவே சீராக மின்சாரம் வினியோகிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்