நீலகிரி மாவட்டம் செறியேரி பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு தெருவிளக்கு வசதி கிடையாது. வனப்பகுதியை ஒட்டி உள்ள பகுதி என்பதால் காட்டுயானை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் காணப்படுகிறது. இரவில் தெருவிளக்குகள் இல்லாததால் பொதுமக்கள் அவசர தேவைக்கு கூட வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் முடங்கி கிடக்கின்றனர். எனவே அங்கு தெருவிளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.