தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பஸ் நிலையத்தில் பஸ்கள் நிற்கும் இடத்திலேயே சிலர் சிறுநீர் கழித்து வருகின்றனர். இதன் காரணமாக அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பஸ்சில் வரும் பயணிகள் மூக்கை மூடியபடி செல்கின்றனர். பஸ்சுக்காக காத்திருப்பவர்களும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மேலும் கொசுக்களும் அதிகளவில் உற்பத்தியாவதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.