தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா பொன்னவராயன்கோட்டை கிராமம் நாடிமுத்துப்பிள்ளை சாலை தொடங்கும் இடத்தில் தாலுகா அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம் அருகே உள்ள மின்மாற்றியின் அடிபாகத்தின் சிமெண்டு காரைகள் பெயர்ந்து பழுதடைந்து காணப்படுகிறது. எனவே அசம்பாவிதம் ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.