தெருவிளக்கு அமைக்க வேண்டும்

Update: 2026-01-11 14:22 GMT

தேவூரில் போலீஸ் நிலையம் வழியாக அம்மாபாளையம் வாய்க்கால் கரை வரை தார்சாலை போடப்பட்டுள்ளது. இந்த சாலையில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு பெயர்ந்து கிடக்கிறது. சாலையோர மின்கம்பங்களில் தெரு விளக்குகள் இல்லை. இதனால் தேவூரில் இருந்து சுமார் 1 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு புகார் அளிக்க மற்றும் பல்வேறு மனு அளிக்க செல்வோர் இரவு நேரங்களில் இருளில் குழந்தைகளுடன் நடந்து செல்லும் பெண்கள், வாகன ஓட்டிகள் அச்சத்தில் செல்கின்றனர், எனவே அதிகாரிகள் தார்சாலை, தெருவிளக்கு வசதி அமைத்து தர வேண்டும்.

மேலும் செய்திகள்