சேதமடைந்துள்ள மின்கம்பம்

Update: 2026-01-11 13:52 GMT

தாராபுரம் அருகே பூளவாடி கிராமம் சந்தை பேட்டை அருகில் உள்ள மின்கம்பம் மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. மேலும் மின்சார வயர்களை புதர்கள், செடிகள், கொடிகள் சூழ்ந்துள்ளன. இந்த பகுதியில் பலத்த காற்று வீசும்போது மின்கம்பம் முறிந்து விழ வாய்ப்பு உள்ளது. எனவே அதற்கு முன்பு அந்த பழுதடைந்த மின்கம்பத்தை மாற்றி, மின்கம்பியை சுற்றி உள்ள புதர்களை அகற்ற வேண்டும் என அந்தபகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்