பர்கூர் ஒன்றியம் பி.ஆர்.ஜி. மாதேப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட ஐ.டி.ஐ. அருகில் சிவாஜி நகர் குடியிருப்பு பகுதியில் சாலையோரம் மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பத்தில் படர்ந்துள்ள செடி, கொடியால் மின்கசிவு ஏற்பட்டு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே தாமதமின்றி மின்கம்பத்தில் படர்ந்துள்ள செடி, கொடியை அகற்ற வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.