கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையத்திற்கு தினமும் 500-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. மேலும் நாள்தோறும ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கிறார்கள். இந்த பஸ் நிலையத்தில் பஸ்கள் வெளியேறும் பகுதியில் உயர் கோபுர மின் விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த விளக்கு மாதக்கணக்கில் எரியவில்லை. இதனால் இரவு நேரத்தில் அந்த பகுதியியே இருள் சூழ்ந்து காணப்படுகிறது. எனவே அந்த உயர் கோபுர மின் விளக்கை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.