சென்னை கவியரசு கண்ணதாசன் நகர் 7-வது பிளாக், 4-வது தெருவில் ஏராளமான குடியிருப்புவாசிகள் உள்ளனர். இப்பகுதி மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக சாலையில் ஒரு மின்சார ஒயர் கிடக்கிறது. இதனால் தெருவில் விளையாடும் குழந்தைகள், நடைபயிற்சி மேற்கொள்ளும் முதியோர்கள் மிகுந்த சிரமம் அடைகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் மின் ஒயரை தகுந்த முறையில் பூமிக்கு அடியில் புதைத்திட உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.