சென்னை தியாகராய நகர், ஜி.என். செட்டி சாலையின் நடைபாதையில் உள்ள மின்சார பெட்டி தரையோடு தரையாக ஒட்டியவாறு உள்ளது. அதன் மின் ஒயர்களும் முறையாக பூமிக்கு அடியில் புதைக்கப்படவில்லை. குறிப்பாக மின்சாரபெட்டியின் அடிப்பகுதி துருபிடித்து காணப்படுகிறது. எனவே இதுதொடர்பான மாநகராட்சி அதிகாரிகள் சற்று உயரத்தில் மின்சாரபெட்டி அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.