பந்தலூர் அருகே நெல்லியாளம் அரசு தேயிலை தோட்ட(ரேஞ்ச்-1) எழுபதெட்டு லைன்ஸ் பகுதியில் ஏராளமான தொழிலாளர்கள் குடியிருந்து வருகின்றனர். இந்த பகுதியில் வனவிலங்குகள் நடமாட்டமும் உள்ளது. ஆனால் தெருவிளக்குகள் இல்லாமல் அந்த பகுதியே இருளில் மூழ்கி கிடக்கிறது. இதனால் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அப்பகுதி தொழிலாளர்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே புதிய தெருவிளக்கள் பொருத்த நெல்லியாளம் நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.