அந்தியூர் அருகே சந்தியபாளையத்தில் இருந்து வெள்ளையம்பாளையம் வரை தெருவிளக்கு வசதி இல்லை. இதனால் அந்த பகுதி இருட்டாக காணப்படுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக பள்ளி முடிந்து வீடு திரும்பும் மாணவ- மாணவிகள், பெண்கள் அச்சப்படுகின்றனர். எனவே தெருவிளக்கு வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.