சாய்ந்த நிலையில் கம்பம்

Update: 2026-01-11 10:19 GMT

அந்தியூர் பஸ் நிலையம் முன்பு போலீசார் சார்பில் இரும்பு கம்பத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த இரும்பு கம்பமானது உடைந்து சாய்ந்த நிலையில் இருந்தது. இதை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் கயிற்றால் இழுத்து அருகே உள்ள மின்கம்பத்தில் கட்டியுள்ளனர். எனினும் இரும்பு கம்பம் எப்போது வேண்டுமானாலும் சாய்ந்து விழ வாய்ப்புள்ளது. அதற்கு முன்பு இரும்பு கம்பத்தை சரிசெய்ய அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்