நாகர்கோவில் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக சங்குத்துறை கடற்கரை பகுதி உள்ளது. தினமும் மாலை மற்றும் வார இறுதி விடுமுறை நாட்களில் இந்தகடற்கரைக்கு ஏராளமான வெளியூர் சுற்றுலா பயணிகள் மற:றும் உள்ளூர் மக்கள் வந்து கடல் அழகை ரசித்து நேரத்தை செலவிட்டு செல்கின்றன. இந்த கடற்கரை சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பங்களில் தெருவிளக்குகள் சில பழுதடைந்து எரியாமல் காணப்படுகிறது. இதனால், கடற்கரைக்கு வரும் சுற்றுலா பயணிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றன. இதன்காரணமாக சமூகவிரோத செயல்கள் நடைபெற வாய்ப்புகள் உள்ளன. எனவே, சுற்றுலா பயணிகள் நலன்கருதி மின்கம்பங்களில் பழுதடைந்த மின்விளக்குகளை அகற்றி விட்டு புதிய மின்விளக்குகளை பொருத்தி எரியவைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அக்பர்,சங்குத்துறை .