ஒளிராத தெருவிளக்குகள்

Update: 2026-01-04 09:49 GMT

கோவையை அடுத்த வீரகேரளம் பகுதியில் கரும்பு இனப்பெருக்க நிறுவனம் அருகில் அனன்யா குடியிருப்பு பகுதி உள்ளது. இங்குள்ள சாலையோரத்தில் மின்கம்பங்கள் நட்டு தெருவிளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. ஆனால் அந்த தெருவிளக்குகள் ஒளிருவது இல்லை. இதனால் இரவு நேரத்தில் அந்த பகுதியே இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனை பயன்படுத்த திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. மேலும் விபத்து அபாயமும் காணப்படுகிறது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே அங்குள்ள தெருவிளக்குகளை பழுது நீக்கி மீண்டும் ஒளிர வைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்