'தினத்தந்தி’-க்கு பாராட்டு

Update: 2025-12-28 16:33 GMT

அத்தாணி-ஆப்பக்கூடல் மாநில நெடுஞ்சாலையில் நஞ்சுண்டாபுரம் அருகே செங்காட்டு தோட்டம் பிரிவில் உள்ள மின்கம்பத்தை சுற்றி செடி-கொடிகள் சூழ்ந்து முழுவதுமாக ஆக்கிரமித்து இருந்தது. உடனே கம்பத்தை சுற்றியுள்ள செடி, கொடிகளை அகற்ற வேண்டும் என்ற செய்தி 'தினத்தந்தி' புகார் பெட்டி பகுதியில் வெளியானது. இதைத்தொடர்ந்து, மின்கம்பத்தில் படர்ந்த செடி-கொடிகளின் வேர்களை துண்டித்து, தொடர்ந்து செடி-செடிகள் மின்கம்பத்தில் வளராமல் தடுத்து நடவடிக்கை எடுத்தனர். செய்தி வெளியிட்டு உதவிய 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் சார்பில் நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் செய்திகள்