பொதுமக்கள் அச்சம்

Update: 2025-12-28 16:28 GMT

 ஈரோடு மாநகராட்சி 36-வது வார்டில் உள்ள புது மஜீத் வீதியில் இருந்து கந்தசாமி வீதி செல்லும் சாலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராட்சத மரம் ஒன்று வேரோடு சாய்ந்தது. இதில் மரம் எதிரே உள்ள மின்கம்பியின் மீது விழுந்ததில் ஒரு மின்கம்பம் சாய்ந்த நிலையிலும், 2 மின் கம்பங்கள் உடைந்து விழக்கூடிய சூழலிலும் உள்ளன. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். அசம்பாவிதம் ஏற்படும் முன்பு மரத்தை அகற்றி மின்கம்பத்தை மாற்ற அதிகாாிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்