டி.என்.பாளையம் ஒன்றியத்துக்குட்பட்ட பங்களாப்புதூர் அண்ணா நகர் தெருவின் நடுவில் இரும்பு மின்கம்பம் உள்ளது. சுமார் 30 ஆண்டுகளாக உள்ள இந்த மின்கம்பம் துருப்பிடித்து சேதமடைந்த நிலையிலும், சாய்ந்தவாறும் காணப்படுகிறது. இதனால் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் தெருவின் நடுவே இந்த மின்கம்பம் இருப்பதால் எந்த வாகனங்களும் செல்ல முடியாத நிலை உள்ளது. மின் கம்பத்தை அகற்றி வேறு இடத்துக்கு மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?