அத்தாணியில் இருந்து ஆப்பக்கூடல் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் நஞ்சுண்டாபுரம் அருகே செங்காட்டுதோட்டம் பிரிவில் ஒரு மின்கம்பம் உள்ளது. இந்த கம்பத்தை செடி-கொடிகள் சூழ்ந்து முழுவதுமாக ஆக்கிரமித்து விட்டன. யாராவது கம்பத்தின் மீது படர்ந்துள்ள செடிகளை தொட்டாலோ, ஆடு, மாடுகள் மேய்ந்தாலோ மின்சாரம் தாக்கும் அபாயம் உள்ளது. எனவே மின்வாரிய அதிகாரிகள் உடனே கம்பத்தை சுற்றியுள்ள செடி, கொடிகளை அகற்றவேண்டும்.