சேலம் மாவட்டம் சங்ககிரி பஸ் நிலையம் அருகே தாசில்தார் அலுவலகம், கோர்ட்டு, போலீஸ் நிலையம், அரசு மருத்துவமனை ஆகியவை உள்ளன. இந்த இடத்தில் இரவு நேரங்களில் போதுமான வெளிச்சம் இல்லாமல் இருள் சூழ்ந்துள்ளது. இதனால் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. அந்த பகுதியில் உயர்கோபுர மின் விளக்கு அமைக்க பலமுறை கோரிக்கை வைத்தும் இதுநாள் வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதற்கு எப்போது தான் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களோ?