வெண்ணந்தூர் அடுத்த வெள்ளப் பிள்ளையார் கோவில் தாசன் காடு பகுதியில் இருந்து 4 ரோடு செல்லும் சாலையில் உள்ள மின்விளக்கு பல நாட்களாக எரியாமல் காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும், நடந்து செல்பவர்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட துறையினர் மின் விளக்கை சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.