தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அடுத்த ஜக்கசமுத்திரம் ஊராட்சி மையப்பகுதி பஸ் நிறுத்தம் அருகே நீண்ட நாட்களாக உயர்கோபுர மின்விளக்கு பழுதடைந்து எரியாத நிலையில் உள்ளது. அதனால் இந்த பகுதி இரவு நேரங்களில் இருள் சூழ்ந்த நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உயர்கோபுர மின்விளக்கு பழுதை சரி செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.