மேட்டூர் தாலுகா நங்கவள்ளி ஒன்றியத்துக்கு உட்பட்ட பெரியசோரகை அருகில் ஆலமரம் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பகுதியில் 4 ரோடு பிரிவு சாலை உள்ளது. இந்த பிரிவு சாலை அருகே இரவு நேரங்களில் வெளிச்சம் இல்லாமல் உள்ளது. இதனால் சாலைகள் இருளில் மூழ்கி, வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். எனவே வாகன ஓட்டிகள், பொதுமக்களின் நலன் கருதி இப்பகுதியில் அதிகளவில் மின் விளக்குகள் பொருத்தி தர நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.