ராசிபுரம் அருகே அப்ப நாயக்கன்பட்டியில் இருந்து பொன்குறிச்சி வரை போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக புறவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலை வழியாக கார், பஸ், லாரி, இரண்டு சக்கர, கனரக வாகனங்கள் இரவு பகல் போக்குவரத்து நடந்து வருகிறது. ஈரோடு, திருச்செங்கோடு, நாமக்கல், கரூர் போன்ற ஊர்களில் இருந்து சென்னைக்கு செல்வதற்கு இந்த வழியை தான் பயன்படுத்தி வருகின்றன. இந்த சாலையில் மின்விளக்கு வசதி இல்லை. புறவழிச்சாலையில் மின்விளக்குகள் அமைத்தால் இரவு நேரங்களில் விபத்து ஏற்பட்டாலோ, திருட்டு போன்ற சம்பவங்கள் நடந்தாலோ உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியும். எனவே புறவழிச்சாலையில் மின் விளக்குகள் அவசியம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.