மின் விளக்குகள் அமைக்க வேண்டும்

Update: 2025-12-07 17:29 GMT
மேல்மலையனூரில் சிறுதலைப்பூண்டி செல்லும் சாலையில் தீயணைப்பு நிலையம் உள்ளது. அங்கிருந்து சிறுதலைப்பூண்டி வரை உள்ள சாலையில் மின்விளக்குகள் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் இரவு நேரத்தில் அப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுவதால் அங்கு திருட்டு, வழிப்பறி போன்ற குற்ற சம்பவங்கள் நடைபெறும் அபாயம் உருவாகியுள்ளது. இதை தவிர்க்க அப்பகுதியில் மின்விளக்குகள் அமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்