மதுரை நகர் நியூ விளாங்குடி ரோஸ்கார்டன் பகுதியில் கடந்த சில நாட்களாக காலை, மாலை என அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகின்றது. இதனால் காலை பணிக்கு செல்லும் தொழிலாளர்கள், பள்ளி மாணவர்கள், இல்லத்தரசிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் இந்த தொடர் மின்வெட்டால் வீட்டில் உபயோகபடுத்தப்படும் மின்சாதன பொருட்களும் பழுதடைகின்றது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தொடர் மின்வெட்டை சரி செய்ய விரைந்து முன்வர வேண்டும்.